ஆன்லைன் மூலம் நடனம் மற்றும் உடற்பயிற்சி - பட்டதாரி பெண் நடத்தும் வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு

ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் ஜும்பா எனப்படும் நடன பயிற்சி மற்றும் பிட்னஸ் பயிற்சிக்கு மதுரையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது..
ஆன்லைன் மூலம் நடனம் மற்றும் உடற்பயிற்சி - பட்டதாரி பெண் நடத்தும் வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு
x
இன்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி, அவற்றை பின்பற்ற பலரும் தவறி வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், கொரோனா  காரணமாக பலரும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளித்து வருகிறார்,  மதுரை பட்டதாரி மாலினி கோபாலகிருஷ்ணன்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாலினி கோபாலகிருஷ்ணன், எம்எஸ்சி இம்முநோலஜி மற்றும் மைக்ரோ பயாலஜியுடன் (immunology and microbiology) எம்பிஏ படித்து உள்ளார்.பள்ளிப்பருவ காலத்திலேயே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர், உடற்பயிற்சி நிலையம் மற்றும் நடன வகுப்புகளை கடந்த ஜனவரி மாதம் முதல் நடத்தி வந்தார். 

தற்போது இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்துள்ள பலரும், வீட்டிலேயே அடைந்து இருக்கும் போது இருந்த மன அழுத்தம் தற்போது குறைந்து உள்ளதாக கூறுகின்றனர். தற்போது இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வருவதாக கூறுகிறார், மாலினி


Next Story

மேலும் செய்திகள்