காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் - குணமடைந்த பின்னும் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்த பின்னரும் தனியார் மருத்துவமனை வீட்டிற்கு அனுப்ப மறுத்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் தலையீடு காரணமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் - குணமடைந்த பின்னும் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு
x
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியரான நிக்கோலஸ், காய்ச்சல் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் பணமும் கட்டியுள்ளார். 2 நாட்களில் காய்ச்சல் குணமடைந்த போதிலும் அவரை வீட்டிற்கு அனுப்பாமல் மேலும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒரு ஆடியோவை அவர் வெளியிட்டது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனடியாக தலையிட்டு மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியதை தொடர்ந்து நிக்கோலஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்