ஓடை மணலை கடத்திய தனியார் எம்.சாண்ட் நிறுவத்துக்கு ரூ.9.5 கோடி அபராதம் விதிப்பு

நெல்லை, பொட்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.சாண்ட் கல்குவாரி நிறுவனம், அந்த பகுதியில் உள்ள ஓடையில் மணலை அள்ளி சட்ட விரோதமாக கடத்தி வருவதாக சேரன்மகாதேவி கோட்டாட்சியருக்கு புகார் வந்துள்ளது.
ஓடை மணலை கடத்திய தனியார் எம்.சாண்ட் நிறுவத்துக்கு ரூ.9.5 கோடி அபராதம் விதிப்பு
x
நெல்லை மாவட்டம் பொட்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.சாண்ட் கல்குவாரி நிறுவனம், அந்த பகுதியில் உள்ள ஓடையில் மணலை அள்ளி  சட்ட விரோதமாக கடத்தி வருவதாக  சேரன்மகாதேவி கோட்டாட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனைத்  தொடர்ந்து கோட்டாட்சியர் நடத்திய ஆய்வில் அங்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கனிம வளங்களை கடத்தியதாக பால்ராஜ், ஆத்திப்பாண்டியன், சங்கரநாராயணன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். கல்குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் ஒன்பதரை கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்