எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 19, 2020, 03:49 PM
சட்டமன்றத்தில் ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, பெய்களை பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடநாடகம், அதிக காலம் நீடிக்காது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மாண்புகளுக்கு இடமளிக்காமல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை என, அறிக்கையில் தெரிவித்துள்ள ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், ஆள் இல்லாத இடத்தில் கம்பு சுழற்றுவதாக கூறியுள்ளார். 

செயற்கையான வீராவேசம் காட்டி, ஊடக வெளிச்சம் தேடிக் கொள்ள முயல்கிறார் என தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத பேரவைக் கூட்டத் தொடர் நிகழ்வுகளின் ஒரு பக்கத்தை மட்டுமே, ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்புகிறார்கள் என்றும், 

ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட  நினைக்கும் அதிமுக அரசின் கபடவேடம், அதிகக் காலம் நீடிக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.