மனைவி நடத்தையில் சந்தேகம் - கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்
பதிவு : செப்டம்பர் 19, 2020, 08:47 AM
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள வாணிப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். கண் பார்வை பிரச்சனையால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், அவரது மனைவி கவிதா வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

நேற்று முன்தினமும்  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், படுக்கையறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கவிதா இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் கார்த்திகேயன் தாய் மாமன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே, கவிதாவின் கணவர் மோகன சுந்தரம், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தபோது,  அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

கவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன சுந்தரம், சம்பவத்தன்று தேநீரில் கவிதாவுக்கு விஷத்தை கலந்து கொடுத்ததாகவும், விஷம் குடித்தும் கவிதாவின் உயிர் பிரியாததால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், மோகன சுந்தரம். மனைவியின் மீது சந்தேகப்பட்டு கண் பார்வையில்லா கணவன் கொலை செய்தது, அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பிற செய்திகள்

"சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார்" - ஜெகன்மோகன்ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

29 views

தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

101 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

274 views

தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

27 views

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

243 views

திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.