ஏரியை ஆக்கிரமித்த வீடுகளை அகற்ற கடிதம் - 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஏரி மீது ஆக்கிரமித்து வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரியை ஆக்கிரமித்த வீடுகளை அகற்ற கடிதம் - 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள்
x
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஏரி மீது  ஆக்கிரமித்து வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிட்லப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட ஏரி புறம்போக்கில் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. அவற்றை அகற்றுமாறு தாம்பரம் வட்டாட்சியர் சரவணன், 2007ம் ஆண்டு ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்டத்தின் படி கடிதம் வழங்கினார். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கூறிய குடியிருப்பு வாசிகள், திடீரென எங்கே செல்வது என எதிர்ப்பு தெரிவித்தனர். 60 முதல் 80 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இடத்தைவிட்டு செல்ல முடியாது என வாக்குவாதம் செய்தனர். வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கொடுத்துவிட்டு அதிகாரிகள் புறப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்