முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் விவகாரம்: "சாமானிய மக்களுக்கு பாதிப்பு" - எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எஸ்.ஆர்.எம்.யூ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் விவகாரம்:  சாமானிய மக்களுக்கு பாதிப்பு - எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு
x
இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எஸ்.ஆர்.எம்.யூ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. S.R.M.U.வின் பொதுச் செயலாளர்  கண்ணையா, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான் இந்திய ரயில்வே கட்டாயம் தனியார் மயமாக்கப்படும் என கூறியதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் முடிவால், சாமானிய மக்கள் ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கண்ணையா தெரிவித்தார். இதனை கண்டித்து வரும் 19-ஆம் தேதி, அதாவது  நாளை இரவு 8 மணி முதல் 8.10 மணி வரை, ரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் தங்களது இல்லங்களில் மின் விளக்குகளை அணைத்து மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்