செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி.... காட்டிக்கொடுத்த கேமரா..

சென்னையில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து திருட்டில் ஈடுபடுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி.... காட்டிக்கொடுத்த கேமரா..
x
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர், வேலையை முடித்துவிட்டு இரவு 8 மணியளவில் பார்த்தசாரதி தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சர்வ சாதாரணமாக நடந்து வந்த சிறுவன் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். சிறிது தூரம் ஓடிய அந்த சிறுவன் தான் திருடிய அந்த செயினை வேறொரு நபரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளான். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் நேராக பார்ப்பது போலவே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது... 3 சவரன் நகையை பறி கொடுத்த லட்சுமி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனையிட்டதில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில் சொறி விஜய் என்கிற விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கூட்டாக திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். 
ஏற்கனவே திருட்டில் கை தேர்ந்த சொறி விஜய் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து 17 வயதான சிறுவனுக்கு செயின் பறிக்க கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த பயிற்சியை பின்பற்றி தான் 17 வயதான சிறுவன், லட்சுமியிடம் செயினை பறித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறுவர்களை மனம் மாற்றி அவர்களுக்கு செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களை கற்றுக் கொடுத்து அவர்களை குற்றவாளிகளாக மாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்