சகோதரியின் வாழ்க்கைக்காக கொலைகாரனாக மாறிய அண்ணன் - தலைமறைவான கொலையாளியை தேடி வரும் போலீசார்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 07:13 PM
மதுரையில் தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியானதால் ஆத்திரமடைந்த அண்ணன், கொலையாளியாக மாறியதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் அதே பகுதியில் சிமெண்ட் வியாபாராம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள். இதில் 2வது மகனான சிவகுமாரை தன் தங்கை அன்னபேச்சியின் மகள் கலைச்செல்விக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். உறவுமுறையாக இருந்தாலும் இவர்களுக்கு மனதளவில் ஒத்துப் போகாததால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வந்தது. இதனால் வெறுத்துப் போன கலைச்செல்வி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரிந்து சென்ற கலைச்செல்வியை மீண்டும் சிவகுமாருடன் சேர்ந்து வாழ வைக்க உறவினர்கள் பலரும் முயற்சி எடுத்தனர். ஆனாலும் கூட இருவரும் பிரிவதிலேயே திடமாக இருந்ததால் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இருந்தபோதிலும் தங்களின் மகனின் நலனை கருதிய சிவலிங்கம், மகன் சிவகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார். 
இவர்களின் திருமணத்தால் அதிர்ச்சியடைந்தார் சிவகுமாரின் மைத்துனரான விஜயகுமார். தன் சகோதரி கலைச்செல்வியின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் போது எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மனதுக்குள் புலம்பித் தீர்த்தார். நேராக தன் தாய் மாமன் சிவலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற விஜயகுமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை குத்தினார். தன் கணவருக்கு நடந்த கொடூரத்தை பார்த்து தடுக்க வந்த சரோஜா, மகன் சிவகுமார் உள்ளிட்டோரையும் ஆத்திரம் தீரும் அளவுக்கு குத்தினார் விஜயகுமார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவலிங்கத்தின் மனைவி சரோஜா உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

16 views

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

8 views

பிற செய்திகள்

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

9 views

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

78 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

42 views

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.

12289 views

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: "விசாரணையில் இருந்து விலகி கொள்கிறோம்" - நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முடிவு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் இருந்து விலகி கொள்வதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு தெரிவித்துள்ளது.

58 views

மருத்துவ நிபுணர்களுடன் 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.