கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: "சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" - பேரவையில் தி.மு.க, காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
x
பேரவையில் இந்த திட்டம் குறித்து பேசிய தி.மு.க உறுப்பினர் பொன்முடி, திட்டம் மத்திய அரசுக்கானது என்றாலும் பயனாளர்கள் விவரங்களை சரிபார்ப்பது மாநில அரசு ஊழியர்கள் தான் என்றும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, விவசாயிகளை காக்க வேண்டிய அரசு, அவர்களுக்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார்.  110 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாகவும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்