மோடி பிறந்த நாள் - மீன் வழங்கி நமீதா உற்சாகம்

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
x
பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி, சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு வந்த நமீதாவுக்கு அப்பகுதியினர் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு பட்டு சால்வையில் பெரிய மீன் ஒன்றை கிடத்தி வைத்திருந்த அவர்கள், தலா ஒரு மீனை அப்பகுதி மக்களுக்கு நமீதா மூலம் வழங்கினர். பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய நமீதா, நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க மறுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்