செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு - போக்குவரத்து கழக முன்னாள் அதிகாரிகளுக்கு சம்மன்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:04 PM
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் அதிகாரிகள் மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் அதிகாரிகள் மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சென்னை போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குனர் ஆல்பர்ட் தினகரன், முன்னாள் இணை இயக்குனர் மற்றும் டேனியல் என்ற அதிகாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.