பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் : பணிக்கொடை இல்லை - தமிழக அரசு சார்பு செயலாளர் விளக்கம்
ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை கிடையாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு யார் யாருக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கிடைக்கும் என்பதில், அண்மையில் குழப்பம் உள்ளது. இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தமிழக அரசின் சார்பு செயலாளர் வேலாயுதம் அளித்துள்ள பதிலில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கவோ பணிக்காலத்தில் இறந்தால் முன்னர் வழங்கிய பணப் பலன்களை வழங்கவோ அரசு விதிமுறையில் இடமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
Next Story

