மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 பேர், நிச்சயதார்த்த விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 பேர், நிச்சயதார்த்த விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டு இருந்த வேன், 11 மற்றும் 10 வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் உதவியுடன் அவர்கள் மாற்று வாகனத்தில் உடுமலைப்பேட்டை திரும்பினர்.
Next Story

