கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என குற்றச்சாட்டு

வேலூரில் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என குற்றச்சாட்டு
x
கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி மற்றும் களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகியோர் வேலூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இருவரும் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆக்ஜிசன்  நின்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆக்ஜிசன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் அதனை சரி செய்துவிடுவோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது., இந்த நிலையில்  இருவரும் மூச்சு தினறல் ஏற்பட்டு  இறந்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. இதனையடுத்து கொரோனா நோயாளிகள்  ஆக்சிஜன் குறைப்பாட்டினால் இறந்ததாக பரவும் தகவல் பொய்யானது என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.   நுரையீரல் பாதிப்பு மற்றும் நிமோனியா  காரணமாகவே   இருவரும் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்