டெல்லி கலவர வழக்கு - கலவரத்தை தூண்டியதாக யெச்சூரி மீது வழக்கு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:22 AM
டெல்லி கலவர வழக்கில் சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்ப​ட்டு உள்ளது.
டெல்லி கலவர வழக்கில் சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்ப​ட்டு உள்ளது. மாணவர்களை போராட தூண்டியதாகவும், போராட்டத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தவும் அவர்கள் அறிவுறுத்தியதான புகாரில் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. கைதான மாணவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் யெச்சூரி மற்றும் யோகேந்திர யாதவ் பெயர் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சி.ஏ.ஏ. மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது என கூறி, மத்திய அரசுக்கு எதிராக போராட மாணவர்களை தூண்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.