பச்சிளம் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் - காதலன் கைவிட்டதால் பெண் எடுத்த விபரீத முடிவு
பதிவு : செப்டம்பர் 10, 2020, 06:30 PM
சங்கரன்கோவில் அருகே குழந்தையை எரித்துக் கொன்ற வழக்கில் கைதான இளைஞர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. திருமணத்துக்கு முன் காதலனால் ஏமாற்றப்பட்ட சங்கரகோமதி என்ற பெண்ணின் குழந்தை அது என விசாரணையில் தெரியவந்தது. 
எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்த சங்கர், அதே ஊரை சேர்ந்த சங்கரகோமதி என்ற பெண்ணிடம் பழகி அத்துமீறிய நிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் காதலன் திருமணம் செய்ய மறுக்கவே, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பம் அவமானத்தில் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். கர்ப்பமாக இருந்த சங்கரகோமதி சம்பவத்தன்று வீட்டிலேயே குழந்தை பெற்றெடுக்க அதை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். தாய் சங்கரகோமதி, பாட்டி இந்திரா ஆகியோர் குழந்தையை எடுத்துச் சென்று உயிருடன் எரித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாட்டி இந்திராவை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கரகோமதி காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தலைமறைவாக இருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
சங்கரகோமதியை ஏமாற்றிய சங்கர் பல பெண்களை ஏமாற்றிய மோசடி பேர் வழி என்பது விசாரணையில் தெரியவந்தது. சங்கரகோமதி மட்டுமின்றி பல பெண்களிடம் காதல் வலை வீசி அவர்களை ஏமாற்றியுள்ளார் சங்கர். சில நாட்களுக்கு முன் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சங்கர். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவரவே, சங்கரின் நடவடிக்கையை சந்தேகித்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சங்கர் காவல்நிலையம் வரை செல்லவே, அந்த பெண் சங்கரை பிடிக்கவில்லை என கூறியிருக்கிறார். பின்னர் இரு தரப்பிலும் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போலீசார். தன்னை விட அதிக வயது கொண்ட பெண்களிடமும் உறவை தொடர்ந்துள்ளார் சங்கர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை மயக்கி தன் வேலையை காட்டியிருக்கிறார் சங்கர். இதுபோல் பல கதைகளை கூறி போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் சங்கர். கைது செய்யப்பட்ட சங்கர், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் சங்கரகோமதி விரைவில் கைது செய்யப்படலாம் என்கிறது காவல்துறை... போலியான காதலுக்கு பலியாகி இருப்பது ஒரு பிஞ்சு குழந்தை என்பது தான் சோகம்.... 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

280 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

188 views

பிற செய்திகள்

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

17 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

35 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

42 views

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

10 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

68 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

585 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.