அனைத்து வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் - கூடுதலாக ஒரு மணி நேரம் சேவை நீட்டிப்பு

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
அனைத்து வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் - கூடுதலாக ஒரு மணி நேரம் சேவை நீட்டிப்பு
x
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு காரணமாக, கடந்த 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அந்த வரிசையில் சென்னை மாநகரில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. நேற்று வரை  காலை 7 மணி முதல் 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இன்று முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையும்,  மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்