வாயில் காயம்பட்ட நிலையில் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 02:13 PM
வாயில் காயம்பட்ட நிலையில் சுற்றி வந்த மக்னா யானை, கேரள மாநிலம் சோலையூர் பகுதியில் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள  வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா  வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானையின் நாக்கு 80 சதவீதம் அறுபட்டு சேதம் அடைந்து இருந்ததால், அந்த யானையால் சாப்பிடவோ, குணப்படுத்தவோ இயலாத நிலை இருந்தது. இதனால் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வனத்துறையினரால் வைக்கப்பட்ட மருந்து கலந்த உணவை யானை எடுத்துக் கொண்டது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஆனைக்கட்டி வழியாக, கேரள வனப்பகுதியான சோலையூர் மரப்பாலம் அருகே  நகர முடியாமல் நின்று கொண்டிருந்த அந்த யானை, நேற்று மாலை படுத்துவிட்டது. இந்நிலையில், இன்று காலையில் மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து வந்த  கேரள வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து  உயிரிழந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அவற்றை காக்க முன்வர வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

390 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

314 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

73 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

19 views

பிற செய்திகள்

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

4 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

23 views

சசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

324 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

31 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13 views

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.