தென்காசி பட்டப்பகலில் வீடு புகுந்து 100 சவரன் கொள்ளை
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:44 PM
தென்காசி மற்றும் மதுரையில் நடந்த இருவேறு சம்பவங்களில், 200 சவரன் நகைகளை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தென்காசியில் பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலதிபரின் மனைவியை அறையில் அடைத்து விட்டு 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் சம்பா தெருவில் வசித்து வரும், ஜெயபால் மர வியாபாரம் செய்து வருகிறார். இவர், தொழில் விஷயமாக சென்னை வந்திருந்த நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், அவரது மனைவி ஜெயலட்சுமியை, ஒரு அறையில் அடைத்து வைத்து வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் சென்றதும் ஜெயலட்சுமி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். தகவலின் பேரில் தென்காசி போலீஸ் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்க வந்த இரண்டு பேரில் ஒருவன் தலையில் தலைக்கவசம் அணிந்து இருந்ததாகவும் மற்றொருவன் பர்தா அணிந்து இருந்ததாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார். பர்தா அணிந்தவன் வாசலில் நின்று வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியதாகவும், தான் கதவை திறந்து வெளியே வந்தபோது தலைக் கவசம்  அணிந்தவன் தனது வாயைப் பொத்தி செல்லோ டேப் மூலம் கைகளை கட்டி ஒரு அறையில் அடைத்ததாகவும் ஜெயலட்சுமி குறிப்பிட்டார். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார், தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.