சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கு - நேரில் ஆஜராக நெல்லை ஆட்சியர், எஸ்.பி.க்கு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 03:55 PM
மணல் கடத்தலை தடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவில்,  கேரளாவைச் சேர்ந்த மேனுவல் ஜார்ஜ் என்பவர் தங்கள் பகுதியில் எம் சாண்ட் குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளதாகவும்.   தினமும் இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகள் வரை சட்டவிரோதமாக  மண்ணை அள்ளி கடத்தி விற்பனை செய்து வரும் நிலையில், நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் சத்யநாராயணன்,  ராஜமாணிக்கம் அமர்வு, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.  மணல் கடத்தல் காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  மேலும், ஆட்சியர், மற்றும் எஸ்.பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5367 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2374 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

345 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

280 views

பிற செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

22 views

பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

6 views

டிரோன் மூலம் யானைகள் கண்காணிப்பு - இறப்புகளை தடுக்க வனத்துறை முயற்சி

கோவையில் அடர்ந்த வனப்பகுதி யானைகள் மற்றும் விலங்குகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

23 views

வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.