3 நாட்கள் பேரவை கூட்டம் - அலுவல் ஆய்வுக் குழு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 02:11 PM
தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரவைக் கூட்டத்தை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அலுவல் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள நிலையில், வருகிற 14ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை, பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கலைவாணர் அரங்கில், பேரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.