"அகழாய்வில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு" - டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும் பணி துவக்கம்

சிவகளை அகழாய்வு பணியின் போது கிடைத்த முதுமக்கள் தாழியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிசி, நெல்மணிகள் மற்றும் தாடைகளுடன் சேர்ந்த பற்கள் கிடைத்துள்ளது
அகழாய்வில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு - டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும் பணி துவக்கம்
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் மாநில தொல்லியல் துறையினர்  அகழாய்வு பணிகளை  தொடங்கியுள்ளனர்,.  இதுவரை அங்கு 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதுமக்கள் தாழிகளில் இருந்து நெல்மணிகள், அரிசி, தாடை எலும்புகள், தாடையுடன் சேர்ந்த பற்கள், சாம்பல் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. அந்த பொருட்களை டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும் போது அவை 3 ஆயிரம்  ஆண்டுகள் பழமையானது  என தெரியவரும் என்று ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்