முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் வன்பொருள் உற்பத்திக்கான புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
x
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 முதல் 18 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, கடலூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிபேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 20 முதல் 24 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி , மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில்
25 முதல் 30 சதவீதம் வரை தொழில் மானியம் வழங்கப்படும் எனவும், தொழில் பூங்காக்களில் மின்னணு  வன்பொருள் நிறுவனம் தொடங்கினால் முதலீட்டு மானியம் போல நில மானியமும்  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சி ஊக்கத் தொகையாக மாதம் 4 ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாதத்திற்கும்,முதன் முதலில் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாதத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியிலான உற்பத்தியை துவக்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவுசார் மூலதனம் மற்றும் தரச்சான்றிதழ் மானியம் போன்ற மானியங்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்