தனியார் சிமெண்ட் ஆலையை மூட வலியுறுத்தல் - பொதுமக்களுக்கு ஆதரவாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 03:12 PM
கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது.
கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் சிமெண்ட் ஆலையை மூட வலியுறுத்தி குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், சிமெண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கோவை தெற்கு  மாவட்ட பாஜகவினர் பாலக்காடு நெடுஞ்சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.