திரைப்படத்துக்கு ஆதியாக விளங்கும் தெருக்கூத்து - கொரோனா ஊரடங்கால் நின்றுபோன திருவிழாக்கள்

கொரோனா ஊரடங்கால் உணவுக்கே வாழ்வாதாரம் இழந்து தற்கொலை மன நிலையில் உள்ள தங்களை காப்பாற்றுமாறு தெருக்கூத்து கலைஞர்கள் கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.
திரைப்படத்துக்கு ஆதியாக விளங்கும் தெருக்கூத்து - கொரோனா ஊரடங்கால் நின்றுபோன திருவிழாக்கள்
x
களைகட்டி புரட்சியை ஏற்படுத்தும் திரைப்படங்களுக்கு ஆதியே, தெருக் கூத்துதான். மக்களின் அருகில் சென்று அவர்களின் மொழிநடையில் நடித்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது, தெருகூத்துக் கலைஞர்கள் என்றால் அது மிகையில்லை. பல அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கையை மக்களிடம் சொல்ல, ஒருகாலத்தில் இவர்களே தூதுவர்களாக திகழ்ந்தனர். இதிகாச கால நாயகர்களாக பாத்திரம் ஏற்கும் அவர்கள், திரைப்பட நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் ஒப்பனையும், அலங்காரமும் செய்து கொள்கின்றனர். அப்போது பொருமையாக இருக்கும் கலைஞர்கள், களமிறங்கினால், அச்சு அசலாக நடித்து மெய்சிலிர்க்க வைப்பது வழக்கம். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளனர். ஊரடங்கால் திருவிழாக்கள் முடங்கிய நிலையில், வாழ்வாதாரம் இழந்து முடங்கிபோயினர்.

Next Story

மேலும் செய்திகள்