வேளாங்கண்ணி பேராலயம் நாகூர் தர்காவை திறக்க அனுமதி - பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

நாளை முதல் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நாகை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
வேளாங்கண்ணி பேராலயம் நாகூர் தர்காவை திறக்க அனுமதி - பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
x
வழிபாட்டுத்தலங்களை திறக்க  தமிழக அரசு அனுமதி அளித்த பிறகும் வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா  ஆகியைவை திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்,. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி பேராலயமும், நாகூர் ஆண்டவர் தர்காவும் நாளை காலை முதல் திறக்கப்பட உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.  வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ள ஆட்சியர்,   உள்ளூர் பக்தர்கள் காலை 8 மணி முதல் மாலை 5:30, மணி வரை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பிரார்த்தனைக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.  இதைப்போல் நாகூர் தர்கா நாளை அதிகாலை 4:30 மணி முதல் இரவு 8:00, மணி வரை  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,.

Next Story

மேலும் செய்திகள்