மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல் - காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

மின் வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல் - காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. மேலும், 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்த காரணத்தினால்,  வாகனத்தை போலீசார்  பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்தார். கோபாலசாமியின் உத்தரவிற்கிணங்க  கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் மின்வயரை, மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.  இரண்டு மணி நேரத்திற்கு பிறகே காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்