"விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை தமிழகத்தில் தேர்வெழுத அனுமதிக்க ​வேண்டும்"

விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் தமிழகத்திலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை தமிழகத்தில் தேர்வெழுத அனுமதிக்க ​வேண்டும்
x
விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் தமிழகத்திலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் மருத்துவ கவுன்சிலில் மருத்துவர்களாக பதிவு செய்யவும், பணியாற்றவும் தகுதி தேர்வு எழுத வேண்டும். இந்நிலையில், தி.மு.க. கோரிக்கையை ஏற்று இரண்டாயிரத்து 492 மருத்துவ மாணவர்கள் தேர்வெழுத சென்னை, மதுரை, திருச்சியில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விடுபட்ட 27 மாணவர்களும் தமிழகத்தில் தேர்வெழுத நடவடிக்கை எடுப்பது தொடர்பான மனுவை டி.ஆர்.பாலு எம்.பி. இணையதளம் மூலமாக அனுப்பி உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்