ஆயுதப்படை காவலர் ஏழுமலை மரண விவகாரம் - 2 எஸ்.ஐ. உள்பட மூவர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் காவலர் குடியிருப்பில், ஆயுதப்படை காவலர் ​​உயிரிழந்த விவகாரத்தில், 2 எஸ்.ஐ. உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படை காவலர் ஏழுமலை மரண விவகாரம் - 2 எஸ்.ஐ. உள்பட மூவர் பணியிடை நீக்கம்
x
விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை காகுப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். விழுப்புரம் மாவட்ட காவல்துறையில், சுழற்சி முறையில் பாதுகாவலர் பணியில் இருந்த ஏழுமலை, கடந்த 16ஆம் தேதி அறைக்குள் சென்றுவிட்டு திரும்பவில்லை. சந்தேகத்தின் பேரில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த கிடந்தார். இந்த விவகாரத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இதில், பணி முடித்து வந்தவரிடம் துப்பாக்கியை வாங்காமல் மெத்தனம் காட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டில், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், ஞனசேகரன் மற்றும் காவலர் ராஜசேகர் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுளார்.


Next Story

மேலும் செய்திகள்