ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்
x
உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார். அவருக்கு வயது 78.  திடீர் மாரடைப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மரணமடைந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், சென்னை உயர் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். சொந்த ஊரான தேவக்கோட்டையில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

"ஏ.ஆர்.லட்சமணன் மறைவு பேரிழப்பாகும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் 



உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர்  ஏ.ஆர் லட்சுமணன் மறைந்த செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர் என புகழாரம் சூட்டியுள்ள முதலமைச்சர், அவரது மறைவு தமிழகத்திற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும் எனக் கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் 




உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தனது துணைவியார் மறைந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மறைந்திருப்பது, இதயத்தை நொறுங்கிப் போக வைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், முல்லைபெரியாறு, பெண்கள் மீதான ஆசீட் வீச்சு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர் என பெருமிதம் தெரிவித்துள்ளார். 





Next Story

மேலும் செய்திகள்