சென்னையில் அக்பர் என்பவரை கடத்தி ரூ. 2 கோடி வழிப்பறி

சென்னையில் தன்னை கடத்தி 2 கோடி ரூபாய் பணத்தை பறித்து சென்றவர்கள் குறித்து ஒருவாரத்துக்கு பிறகு அக்பர் என்பவர் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அக்பர் என்பவரை கடத்தி ரூ. 2 கோடி வழிப்பறி
x
மண்ணடியை சேர்ந்த அக்பர் என்பவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ஹையட் பில்டிங் அருகே காரில் கடத்தியவர்கள், அவரிடம் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை பறித்து கொண்டு திருவான்மியூர் அருகே  இறக்கிவிட்டு தப்பி உள்ளனர். எப்போது நடந்தது என போலீசார் கேட்ட நிலையில், ஒருவாரத்துக்கு முன்பு நடந்தது என கூறிய அக்பர், தன்னை கடத்தியவர்களை தனக்கு தெரியும் என்றும், என்னிடம் இருந்து அவர்கள் எடுத்துச் சென்றது ஹவாலா பணம் என்றும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், பறிபோனது ஹவாலா பணம் என்பதால், வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்