"கொரோனா தாக்கம் குறைந்தால் தான் பள்ளி திறப்பு பற்றி முடிவு" - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் 4 புள்ளி 26 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் புதிய தடுப்பணை கட்டும் பணிகளுக்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
கொரோனா தாக்கம் குறைந்தால் தான் பள்ளி திறப்பு பற்றி முடிவு - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
x
ஈரோடு மாவட்டத்தில் 4 புள்ளி 26 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் புதிய தடுப்பணை கட்டும் பணிகளுக்கு  அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றார். இதுவரை 2 புள்ளி 35 லட்சம் மாணவர்களுக்கு மேல் அரசு பள்ளிகளில் சேர்ந்து  உள்ளதாகவும், இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  கொரோனோ தாக்கம் குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு பற்றி  முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்