தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் - பொறிவைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை பொதுமக்களே பொறிவைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் - பொறிவைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு மற்றும் திக்குறிச்சி பகுதியில் கடந்த சில வாரங்களாக 5 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் 3 பேர் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி சுற்றி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் 3 பேரும் சுற்றி வருவதை கவனித்த மக்கள் திட்டமிட்டு பதுங்கியிருந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் 2 பேரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்