வீட்டுக்குள் பேருந்து நடத்துனர் தூக்கு போட்டு தற்கொலை - முறையற்ற உறவுக்கு தன் உயிரை பலியாக்கிய சோகம்

கோவை அருகே இளைஞர் ஒருவர் காதலியின் வீட்டுக்குள் இருந்ததை கண்டறிந்த உறவினர்கள் வீட்டுக்குள் அவரை வைத்து பூட்டியதால் அவமானத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்குள் பேருந்து நடத்துனர் தூக்கு போட்டு தற்கொலை - முறையற்ற உறவுக்கு தன் உயிரை பலியாக்கிய சோகம்
x
கோவை சூலூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் கிருஷ்ணகுமார்  தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். 
இவர் தன்னுடைய நண்பர் மணிகண்டனின் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில்  வசித்து வந்த ஒருவரின் மனைவியுடன்  கிருஷ்ணகுமார்  நெருங்கி பழகி வந்துள்ளார் . சம்பவத்தன்று அங்கு சென்ற கிருஷ்ணகுமார் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது கிருஷ்ணகுமாரை பின் தொடர்ந்து வந்த உறவினர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.  எப்படியோ அந்த பெண் வெளியே  தப்பித்து ஓடி விட கிருஷ்ணகுமார் மட்டும் வீட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். வெளியே வந்தால் தன்னுடைய மானம் போய் விடும் என கருதிய அவர் வீட்டுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ,நிர்வாண நிலையில் கிடந்த  கிருஷ்ணகுமாரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்