டெல்டா மாவட்டங்களில் தமிழக முதல்வர் நாளை ஆய்வு - முதல்வர் வருகையை ஒட்டி, ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் 2 நாள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் தமிழக முதல்வர் நாளை ஆய்வு - முதல்வர் வருகையை ஒட்டி, ஏற்பாடுகள் தீவிரம்
x
கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் 2 நாள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்திற்கு வரும் முதல்வருக்கு அதிமுகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்தார். முன்னதாக, விழா மேடைக்கான பணிகளையும் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அவர் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், 22 புதிய திட்டப்பணிகளை, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுகிறார்.  25 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 33 திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்