கிசான் திட்ட பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு - வேளாண் உதவி இயக்குநர்கள் பணி இடைநீக்கம்

கள்ளக்குறிச்சியில் கிசான் திட்ட பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு நடந்தது உறுதியானதை தொடர்ந்து, வேளாண் துறை உதவி இயக்குநர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிசான் திட்ட பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு - வேளாண் உதவி இயக்குநர்கள் பணி இடைநீக்கம்
x
வேளாண்மை துறையில் இயக்குநர் தட்சிணாமூர்த்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள கணினி மையத்தில் நடந்த ஆய்வின் போது, கிசான் திட்ட பயனாளிகள் சேர்க்கை முறைகேடு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பகண்டை கூட்ரோடு வேளாண்மை உதவி இயக்குநர்  ராஜசேகர், தியாகதுருகம்  வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா  இரண்டு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க ஆட்சியர் கிரண்குராலா ஆணையிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்