ஸ்டெர்லைட் ஆலை- வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் நச்சு புகையால் நோய் பரவுவதாக கூறி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்  பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு 'சீல்" வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆலையை திறக்கும் கோரிக்கை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்