11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - நாளை விசாரணை

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரைபடி சபாநாயகர் தனபால் நாளை விசாரணை நடத்துகிறார்.
x
கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவர்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் 11 பேரிடமும் விசாரிக்கிறார். தகுதி நீக்க கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு  நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்