மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்க தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்க தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்க தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
x
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் இந்திய மருத்துவத் துறையை உலகத் தரத்திற்கு முன்னேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் அவை தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தை நிதி ஆயோக்கின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு மத்திய - மாநில அரசுகளும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நிதி ஆயோக் பதிலளிக்க உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்