கொரோனா விதிமீறல் - கடும் தண்டனை வழங்க சட்டம்

கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x
கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய சட்டம் குறித்த விதிகள் அடங்கிய கோப்புகள் விரைவில் சட்டத்துறையிடம், சுகாதாரத்துறை ஒப்படைக்கும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், தொற்றுநோய் சட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்