சாத்தான்குளம் வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
x
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஜாமீன் மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல், சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என்றும் சிபிஐ எதிர்ப்பு  தெரிவித்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்