கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் - இன்று மீண்டும் ஆய்வு செய்த தலைமை செயலாளர் சண்முகம்
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.
கலைவாணர் அரங்கை, தலைமை செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர். சட்டப்பேரவை செப்டம்பர் மாதம் கூட உள்ள நிலையில் , தற்போதுள்ள பேரவை மண்டபத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் போதிய இட வசதி இல்லை....இதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரவையை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலகம் ஆலோத்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவை தலைவர் தனபால் நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்று தலைமை செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர். உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கான இருக்கை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேரவை கூட்டம் கூட்டப்படும் நாள் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
Next Story

