காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி தொடர வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கோரியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை
x
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி தொடர வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கோரியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். தற்போது அந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோடிக் கணக்கான மக்களும், கட்சியின் செயல் மறவர்களும் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி இருவரையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். சோனியாகாந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்