இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 10-வது நாளாக, தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை. இன்றைய தினம் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

