இடஒதுக்கீடு விவகாரம் - அதிமுக அரசு கமிட்டி உறுப்பினரை மாற்றியது ஏன்?" - ஸ்டாலின் கேள்வி

மருத்து இடங்களில் ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி உறுப்பினரை அரசு மாற்றியது ஏன் என்ற ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இடஒதுக்கீடு விவகாரம் - அதிமுக அரசு கமிட்டி உறுப்பினரை மாற்றியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
x
மருத்து இடங்களில் ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி உறுப்பினரை அரசு மாற்றியது ஏன் என்ற ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இது தொடர்பான வழக்கில், அகில இந்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ கல்வியிடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும், 

அதை வழங்கும் நடைமுறை குறித்து முடிவு செய்ய மூன்று மாதங்களுக்குள் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் 
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். 

கமிட்டியில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் 4 செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை, 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உள்ள மத்திய பொது சுகாதார சேவை இயக்குநர் கூட்டி, இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடைமுறை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெளிவாகவே உத்தரவிடப்பட்டது என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்நிலையில் வழக்கில் அதிமுகவும், தமிழக அரசும் மனுதாரராக இருந்தும், இந்த தீர்ப்பினை எதிர்த்து தீர்ப்புக்கு தடை கொடுக்க வேண்டும் என்று கோரியும், இந்த ஆண்டே ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்றும், 

அதோடு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உமாநாத்தை 4 நபர் குழுவிற்கு  உறுப்பினராக நியமித்துள்ளது என்றும் குற்றம் சாட்டிய ஸ்டாலின்,

உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை தான் இந்த கமிட்டிக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்க வேண்டும் என்றும்,

ஆனால் அப்படி செய்யாமல், அவருக்குப் பதிலாக, மருந்துகள் கொள்முதலுக்குப் பொறுப்பாக இருக்கும் உமாநாத் பரிந்துரைத்திருப்பது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்