பொறியியல் படிக்கும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் - செப்.14க்குள் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி உள்ளிட்டவற்றில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தவறினால் அபராதத் தொகையுடன் செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். அதன்பின் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் செப்.15-ம் தேதி முதல், பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Next Story

