தேசிய புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வளசரவாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கொரோனா தொற்று விவகாரத்தில் தமிழக அரசை குறைசொல்ல இயலாது என்றும் கொடிய தொற்றால் ஒட்டு மொத்த உலக நாடுகளே முடங்கியிருப்பதாகவும் கூறினார்.
Next Story
