ஒற்றை யானை தாக்கி இருவர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூர் அருகே ஒற்றை யானை தாக்கி இறந்து போன இருவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஒற்றை யானை தாக்கி இருவர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்
x
புலியரசி கிராமத்தில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்திற்கு சென்ற முனிராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்தனர். இதனால் கோபம் அடைந்த கிராமமக்கள், முனிராஜின் உடலை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தி வரும் காட்டுயானைகளை வேறு பகுதிக்கு விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் இறந்த சம்பவம் புலியரசி கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்