சென்னையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி? - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
சென்னையில் அடுத்த வாரம் திங்கள் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் அமலுக்கு வந்த ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னை மாநகர எல்லைக் குட்பட்ட பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பார்கள் இல்லாமல் மதுபானக்கடைகள் மட்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது....
Next Story

